ETV Bharat / state

செய்தியாளர் கொலை வழக்கு: 'எங்களைப் பற்றி செய்தி சேகரித்ததால் வெட்டிக் கொன்றோம்'

காஞ்சிபுரம்: தங்களைப் பற்றி தொடர்ந்து செய்திகளைச் சேகரித்ததால் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸை வெட்டிப் படுகொலை செய்ததாக குற்றவாளி ஒப்புக்கொண்டுள்ளார்.

tv reporter moses murder case
tv reporter moses murder case
author img

By

Published : Nov 9, 2020, 4:49 PM IST

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் என்பவர் சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கின் முக்கியத் திருப்பமாக, ஏரி அருகே இருக்கும் நிலத்தை ஆக்கிரமித்தது குறித்து தொடர்ந்து செய்தி சேகரித்ததால் மோசஸைக் கூலிப்படை மூலம் கொலை செய்ததாகக் குற்றவாளி நவமணி ஒப்புக்கொண்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சோமங்களம் பழைய நல்லூரில் வசித்துவந்த மோசஸ், ஸ்ரீ பெருமந்தூர் செய்தியாளராகப் பணிபுரிந்துவந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பழைய நல்லூர் பகுதியிலுள்ள ஏரி நிலத்தைச் சமூக விரோதிகள் சிலர் ஆக்கிரமித்து விற்பனை செய்வதாகச் செய்தி சேகரித்துள்ளார். அச்செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டதையடுத்து, நவமணி உள்ளிட்ட சமூக விரோதிகள் அவருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக மோசஸின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால் காவல் துறை அப்புகாரைக் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இச்சூழலில்தான் நேற்றிரவு (நவ.9) 11 மணியளவில் மூன்று பேர் கொண்ட கும்பல் மோசஸை ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்துள்ளது. உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட மோசஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக சோமங்களம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர். அதன்படி பழைய நல்லூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (எ) எலி அப்பு, அட்டை (எ) வெங்கடேஷ், மனோஜ், நவமணி ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நில அபகரிப்பு குறித்து தொடர்ந்து செய்தி சேகரித்ததால் மூன்று பேர் கொண்ட கும்பலைக் கொண்டு கொலைசெய்ததாக ஒப்புக்கொண்டார்.

இதையும் படிங்க: செய்தியாளர் கொலை: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செய்தியாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.