காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்லும் சாலையில் புதிய ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இச்சாலை காஞ்சிபுரத்திற்கு உள்ளே வரும் பிரதான சாலையாக உள்ளதால் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்துசெல்கின்றன.
இந்நிலையில், புதிய ரயில்வே நிலையத்தில் உள்ள ரயில்வே சிக்னலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதைப் பழுதுபார்க்கும் பணி இன்றும், நாளையும் (டிச. 03, 04) நடைபெற உள்ளது. இதன் காரணமாக இரண்டு நாள்களுக்கு இரவு 9 மணிமுதல் காலை 6 மணிவரை ரயில்வே கேட் மூடப்படும் என ரயில்வே துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை வழியாகச் செல்லும் வாகனங்கள், காஞ்சிபுரம் ஏனாத்தூர் சாலை வழியாகச் செல்லவும், காஞ்சிபுரம் அரக்கோணம் சாலை வழியாகவும் மாற்றுப்பாதையில் இரு நாள்கள் குறிப்பிட்ட அந்த மணி நேரத்தில் திருப்பிவிடப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.