ETV Bharat / state

வாயில் வசமாக சிக்கிய டூத்பிரஷ்; இப்படியுமா நடக்கும்?...

author img

By

Published : Mar 5, 2022, 9:09 PM IST

காஞ்சிபுரத்தில் பல் துலக்கும்போது கீழே விழுந்த பெண்மணியின் வாய் இடுக்குகளில் சிக்கிக்கொண்ட டூத்பிரஸை அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

வாயில் வசமாக மாட்டிய டூத்பிரஷை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்-
வாயில் வசமாக மாட்டிய டூத்பிரஷை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் எண்ணெய்காரத் தெருவைச் சேர்ந்த ரேவதி (34) என்பவர் நேற்று முன்தினம் (மார்ச் 2) வீட்டில் டூத் பிரஷை வைத்து பல் துலக்கிக் கொண்டிருந்தார். குளியலறையில் பல் துலக்கிக் கொண்டு இருந்த போது, எதிர்பாராத விதமாக ரேவதி கீழே வழுக்கி விழுந்ததில் அவரது வாயின் பல் இடுக்குகளின் நடுவே டூத் பிரஸ் வசமாகச் சிக்கிக் கொண்டது.

இதனால் வாயைத் திறக்க முடியாமலும் மூடமுடியாமலும் அலறிய ரேவதியை அவரது குடும்பத்தார் மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதையடுத்து, அரசு தலைமை மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் நரேன், வெங்கடேசன் ஆகியோர் தீவிர ஆலோசனை மேற்கொண்டு ரேவதியின் கண்ணத்தின் வழியாக டூத் பிரஸ்ஸை அகற்றலாம் என முடிவெடுத்தனர்.

வாயில் வசமாக மாட்டிய டூத்பிரஷை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்-

அதன்படி, ரேவதிக்கு வலி ஏற்படாமல் இருக்க மயக்க மருந்து செலுத்தி வாயின் பல் இடுக்குகளில் வசமாகச் சிக்கிக் கொண்டிருந்த டூத்பிரஸை முகத்தின் வெளிப்புறத்தில் காதின் கீழே துளையிட்டு கன்னத்தின் வழியாக வெளியே வந்த டூத்பிரஸ்ஸின் பாதியை வெட்டி எடுத்தனர்.

அதேபோல், வாயில் பல் இடுக்குகளின் மத்தியில் மிக ஆழமாகச் சிக்கிக்கொண்டிருந்த டூத்பிரஸ்ஸின் பாதியை அறுவை சிகிச்சை செய்து அவரது வாயிலிருந்து அகற்றினர். பெண்மணியின் வாயில் சிக்கிய டூத்பிரஸ்ஸை அரசு மருத்துவர்கள் அகற்றிய வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும், அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் நரேன், டாக்டர் வெங்கடேசன் ஆகியோரின் இந்த சேவையை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:உணவு இல்லாமல் தவிக்கும் காட்டு யானை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.