காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், நெமிலி ஊராட்சியில் உள்ள சின்ன ஏரியில் 24 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பில் கரையை பலப்படுத்தி கலங்கல் அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பொன்னையன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்நாடு ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தார்.
அப்போது பேசிய அவர்,”தமிழ்நாடு முழுவதும் மழை நீரை சேமிக்க குடிமராமத்து பணி தொடங்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 188 சிறுபாசன ஏரிகள், 1164 குளங்களை 62 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் குடிமராமத்து பணிகள் நடைபெற்றவுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஏரிகள் தூர்வாருவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன” என்றார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.