ETV Bharat / state

பூத புரீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

காஞ்சிபுரம்: ஸ்ரீ பெரும்புதூர் அருள்மிகு சௌந்தரவல்லி சமேத பூத புரீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பூத புரீஸ்வரர் திருக்கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

author img

By

Published : Mar 29, 2021, 12:40 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரவல்லி சமேத பூத புரீஸ்வரர் திருக்கோயிலில் பத்தாம் ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெற்றது. இவ்விழா மார்ச் 18ஆம் தேதி தொடங்கி பத்து நாள்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், நேற்று (மார்ச்.28) திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்தத் திருக்கல்யாண உற்சவத்தில் அபிஷேகம், யாகம் நடத்தி பக்தர்கள் சீர் வரிசையுடன் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து, மணமேடைக்கு கொண்டுவரப்பட்ட சீர்வரிசைகளை பெற்றுக்கொண்ட அர்ச்சகர்கள், வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளங்களுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களின் முன்னிலையில் திருமாங்கல்ய தாரணம் நடத்தினர்.

இந்தத் திருக்கல்யாணத்தின் நிறைவில் பக்தர்களுக்கு திருமாங்கல்யக் கயிறு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: மோட்டிவேசனல் ஸ்பீச் கொடுத்த கமல் முதல் அதிமுகவிற்கு சேலஞ்ச் விட்ட அமமுக வேட்பாளர் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.