ETV Bharat / state

குளிர்பதனப் பெட்டி வெடித்து மூன்று பேர் பலி! - reporter

காஞ்சிபுரம்: கிழக்கு தாம்பரம் பகுதியில் குளிர்பதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் நிருபர்
author img

By

Published : Jun 27, 2019, 1:18 PM IST

Updated : Jun 27, 2019, 5:02 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு தாம்பரம் திருமங்கை மன்னன் தெருவில் வசித்து வந்தவர் பிரசன்னா. தனியார் தொலைகாட்சி நிருபரான இவர், தனது தாயார், மனைவி ரேவதி ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு மூன்றுபேரும் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிலிருந்த குளிர்பதனப் பெட்டி வெடித்துச் சிதறி அதிலிருந்து அதிகளவிலான புகை வெளியாகியுள்ளது.

மனைவியுடன் பிரசன்னா
மனைவியுடன் பிரசன்னா

இதையறிந்த மூன்றுபேரும் அங்கிருந்து தப்பிக்க முயன்றும் முடியாமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து ஏற்பட்ட தீ, வீடு முழுவதும் பரவியதில் அவர்கள் மூன்று பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

தீவிபத்து ஏற்பட்ட பிரசன்னா வீடு

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைத்து, வீட்டிற்குள் கிடந்த மூன்று பேர் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:Body:

காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு தாம்பரம் திருமங்கை மன்னன்  தெருவில் தீ விபத்தில் 3 பேர் கருகி பலி

நியூஸ் ஜே செய்தியாளர் பிரசன்னா அவரது மனைவி ரேவதி அர்ச்சனா மாமியார் மூன்று பேர் வீட்டில் நேற்று இரவு குளிர்சாதன பெட்டியில் இருந்து புகை வந்து தீயில் கருகி மூன்று பேர் உயிரிழப்பு

Conclusion:
Last Updated : Jun 27, 2019, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.