ETV Bharat / state

போதைக்காக தின்னரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்த பெயிண்டர் உயிரிழப்பு! - பெயிண்டர் பலி

காஞ்சிபுரம்: ஒரகடம் அருகே போதைக்காக தின்னரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்த பெயிண்டர் ஒருவர் உயிரிழந்தார்.

died
died
author img

By

Published : May 27, 2021, 9:54 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே குன்னவாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் சங்கர். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். தற்போது தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதனால் அனைத்து வகையான மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இதனால், போதைக்காக கடந்த மூன்று நாட்களாக சங்கர் பெயிண்டில் கலக்கும் தின்னர் என்கிற ரசாயனத்தில் எலுமிச்சை பழச்சாறை பிழிந்து குடித்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று (மே 26) சங்கர் வழக்கம் போல் தனது நண்பர்களான சிவசங்கரன், சுரேஷ், கிருஷ்ணன் ஆகியோருடன் வீட்டின் அருகே உள்ள வயல் காட்டில், தின்னரில் எலுமிச்சை பழம் சாறு பிழிந்து குடித்துள்ளார்.

ஒரகடம்
எலுமிச்சை பழச்சாறு கலந்த தின்னர்

அப்போது சங்கருக்கு வலிப்பு வந்துள்ளது. இதனையடுத்து, அவர் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் உயிரிழந்தார். அதே போல் கிருஷ்ணன், சிவசங்கர் ஆகியோரும் சுயநினைவின்றி இருந்தால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ஒரகடம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டனர். சங்கரின் மற்றொரு நண்பரான சுரேஷ் என்ன ஆனார் என்பது குறித்து யாருக்கும் தெரியாதால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுரேஷை தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.