காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் காஞ்சிபுரம் அனைத்து வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் நவரத்தின விழா காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது, "லாரி உரிமையாளர் போராட்டத்திற்கு அரசு உடனடியாக தலையிட்டு வேலைநிறுத்தம் ஏற்படாமல் இருக்கவும், பண்டிகை காலங்களில் மக்களுக்கு பொருள் தட்டுபாடு இல்லாத நிலை உருவாக்குவதற்கு அரசு லாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை மூலமாக சுமூகமாக தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
எங்களது தரப்பில் பல்வேறு கோரிக்கைகளை தீர்மானங்களாக வடிவமைக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தரப்பிடம் வழங்கப்பட உள்ளது. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய திட்டமாக அரசியல் கட்சியினரின் தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும்.
அதன் பிறகு வியாபாரிகள் நலன் கருதி வெளியிடப்படும் தேர்தல் அறிக்கைகளை பொறுத்தே எந்தக் கட்சிக்கு எங்களது ஆதரவு என தெரிவிப்போம்" என்றார்.
இதையும் படிங்க: நிபந்தனைகளுடன் இளையராஜாவை அனுமதிக்க தயார் - பிரசாத் ஸ்டுடியோ