காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்துள்ள மேலூர் குப்பதை சேர்ந்தவர் வடிவேல்(38). இருங்காட்டுக்கோட்டை பகுதியில் டீக்கடை நடத்தி வரும் இவருக்கு தேவி(34) என்ற மனைவியும், மகாலட்சுமி(16) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், வடிவேல் நடத்திவரும் டீ கடை அருகில் எடை மேடை ஒன்று உள்ளது. அதில், ராணிப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி (26) என்ற இலைஞர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வடிவேலுவின் டீக்கடைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இதன்மூலம் வடிவேலுவின் மகள் விஜயலட்சுமிக்கும், பாலாஜிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் பாலாஜி, விஜயலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி கர்ப்பம் ஆக்கியுள்ளார்.
இதையறிந்த விஜயலட்சுமியின் பெற்றோர், ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர், போக்சோ சட்டத்தின் கீழ் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.