காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாத்தூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பிகாரைச் சேர்ந்த ரவி ரஞ்சன் (25) என்பவர் பிகார் இளைஞர்களுடன் வசித்துவந்தார். இவர்கள் அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்கள்.
இந்நிலையில், தன்னுடன் தங்கியுள்ளவர்கள் வேலைக்கு சென்றுள்ள நிலையில், ரவி ரஞ்சன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்பியபோது ரவி ரஞ்சன் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தனர்.
அதன் பின்னர் அவர்கள் உடனே ஒரகடம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகர் விஷாலின் கணக்காளர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு!