செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள பழையனூர் சாலை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ தண்டு துலுக்கானத்தம்மன் கோயில்.
இந்த கோயிலில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பூட்டை உடைத்து கோயிலின் பாதுகாப்புப் பெட்டகத்திற்குள் இருந்த 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து படாளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பஞ்சாபில் விஸ்வரூபம் எடுக்கும் போதைப் பொருள் விவகாரம்