காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 76 சென்ட் நிலம் நகரின் மையப்பகுதியான ஆலடி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ளது.
இந்த நிலம் பல ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. 2012ஆம் ஆண்டு முதல் பல்வேறு நீதிமன்றங்களில் கோயில் நிர்வாகம் வழக்கு தொடுத்தது.
இவ்வழக்கில் கோயில் நிலத்தை கையகப்படுத்த இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அதன் அலுவலர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் 10 கோடி மதிப்பிலான 76 சென்ட் நிலத்தை மீட்டனர்.
இதையும் படிங்க: தனியார் ஆக்கிரமித்த 25 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு