ETV Bharat / state

டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்! - Tasmac staffs protest in kanniyakumari

காஞ்சிபுரம்: அரசு ஊழியருக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஏராளமான டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Feb 26, 2021, 2:44 PM IST

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் காஞ்சிபுரம் காந்தி ரோடு பெரியார் அருகே மாவட்ட செயலாளர் அரசு தலைமையில் 100க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க டாஸ்மாக் சிறப்பு தலைவர் சுந்தரவதனம் மற்றும் மாநில செயலாளர் ஜெயராமன், சி.ஐ.டி.யு டாஸ்மாக் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய டாஸ்மாக் ஊழியர்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் 18 ஆண்டுகாலமாக பணிபுரிந்து வரும் ஊழியர்களின் பணிவரன் முறைபடுத்த வேண்டும், அரசு ஊழியருக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பாதுகாப்பான பணி நிலைமை சுழற்சிமுறை பணியிட மாறுதல், விற்பனை நேரம் குறைவு, பாதுகாப்பற்ற கடைகள் மூடல் உள்ளிட்ட கோரிக்கைகளை சட்டப்பேரவையில் நிறைவேற்றிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி:

அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு குமரி மாவட்ட அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு குழு சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

குமரியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஊழியர்கள்

இதில் 18 ஆண்டுகள் தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கால முறை ஊதியம் வழங்க வேண்டும், அரசு துறையில் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

கரூர்:

கரூர் பேருந்து நிலையம் முன்புள்ள ஆர்.எம்.எஸ் தபால் அலுவலகம் முன்பு டாஸ்மாக் எல்பி.எப் தொழிலாளர் சங்க கரூர் மாவட்ட தலைவர் ராஜகண்ணன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

கரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்

இதில், டாஸ்மாக் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் விற்பனையாளர்கள் மேற்பார்வையாளர்கள் தொடர்ந்து பார்க்கப்படுவதால் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, டாஸ்மாக் ஊழியர்கள் தமிழ்நாடு முழுவதும் தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

விருதுநகரில் நடந்த ஆர்ப்பாட்டம்

இதையும் படிங்க: போடியில் ஓபிஎஸ் கலந்துகொண்ட விழாவில் சலசலப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.