ETV Bharat / state

'டெங்கு காய்ச்சலால் யாரும் அச்சமடைய வேண்டாம்' - அமைச்சர் விஜயபாஸ்கர் - dengue fever in tamilnadu

காஞ்சிபுரம்: டெங்கு காய்ச்சலால் யாரும் அச்சமடைய வேண்டாம் என்றும் அதே நேரத்தில் யாரும் அலட்சியமாக இருந்து விட வேண்டாமென்றும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

tamilnadu-governer-open-new-hospital-in-kanchipuram
author img

By

Published : Sep 30, 2019, 11:34 PM IST

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர் கோனேரிக்குப்பம் கிராமத்தில் ரூ.15 கோடி மதிப்பில் ஸ்ரீசங்கரகிருபா கல்வி மற்றும் சுகாதார அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பல்நோக்கு மருத்துவமனையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திறந்து வைத்தார்.

இந்த மருத்துவமனையில் ரூ.50 கட்டணத்தில் புற நோயாளிகளுக்கான மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளதாகவும், சாதாரண மக்களும் பயன் பெறக்கூடிய வகையில் 24 மணி நேரமும் மருத்துவமனை செயல்படும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். நிகழ்வு முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், " டெங்கு காய்ச்சலால் யாரும் அச்சமடைய வேண்டாம்; அதே நேரத்தில் அலட்சியமாகவும் இருந்து விட வேண்டாம்.

மருத்துவமனையைத் திறந்து வைத்த ஆளுநர்

சிங்கப்பூர், தெலங்கானா போன்ற பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளனர் " என்றார்.

இதையும் படிங்க: வேலூரில் பரவும் டெங்கு காய்ச்சல் மறைக்கப்படுகிறதா?

Intro:காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர் கோனேரிக்குப்பம் கிராமத்தில் ரூ.15 கோடி மதிப்பில் ஸ்ரீசங்கரகிருபா கல்வி மற்றும் சுகாதார அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சங்கரா பல்நோக்கு மருத்துவமனையை  தமிழக  ஆளுநர் பன்வாரிலால்  புரோஹித் திறந்து வைத்தார்  

Body:காஞ்சிபுரம் ஸ்ரீவிஜேயந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாசியுடன் கோனேரிக்குப்பத்தில் சங்கரா பல்நோக்கு மருத்துவமனை திறந்து வைக்கப்படவுள்ளது.

சுவாமிகளின் வேண்டுகோளுக்கிணங்க சாதாரண மக்களும் பயன்பெறக்கூடிய வகையில் ரூ.50 கட்டணத்தில் புற நோயாளிகளுக்கான மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளன.  எல் அண்ட் டி நிறுவனம் ரூ. 9 கோடி நிதியுதவி செய்திருக்கிறது. மொத்தம் ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இம்மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும். மருத்துவமனையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  திறந்து வைத்தார். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டுடார்  

பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த விஜயபாஸ்கர் கூறியதாவது

டெங்கு காய்ச்சலால் யாரும் அச்சமடைய வேண்டாம் அதேநேரத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றார் சிங்கப்பூர் தெலுங்கானா போன்ற பிற பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமாக நோய்களினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள் Conclusion:ஆனால் தமிழகத்தில் வெறும் நூறு எண்ணிக்கையில்தான் டெங்குவால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் டெங்கு விழிப்புணர்வு குறித்து பள்ளி மாணவர்கள் சுகாதாரத்துறை தூதுவராக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்றார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.