காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலை கட்டுபடுத்தும் வகையில், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில், கோயில்களிலும் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நாள்களில் ஆகம விதிகளின்படி பூஜைகள் மட்டும் நடைபெற்றுவந்தன.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு கோயில்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கியது. இதனால் முக்கிய கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். அந்த வகையில், காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
குறிப்பாக உலக பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் காலை முதலே ஏராளமான வெளியூர், வெளி மாவட்ட, வெளிமாநில பக்தர்கள் குவிந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நேரத்தில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பக்தர்கள் கடைபிடிப்பதை கோயில் நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: அலங்கார ஊர்தியை ஆரவாரத்துடன் வரவேற்ற மக்கள்!