காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில், காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது புறவழி சாலையில், சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மகேந்திரன் என்ற இளைஞருடன் சேர்ந்து செல்போன் திருட்டில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர், சிறுவர்கள் இருவரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மகேந்திரனை சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள்; துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!