காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள காட்டுக்கூடலூர் கிராமத்திற்கு ஒரு அரசு பேருந்து மட்டுமே தினமும் இயக்கப்படுகிறது. காலை ஒன்பது மணி, மாலை ஐந்து மணி ஆகிய நேரங்களில் மட்டும் இப்பேருந்து வருவதால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காலை நேரத்தில் வரக்கூடிய அரசு பேருந்து நேரம் தவறி வருவதால் பள்ளி செல்லும் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர். மேலும், பள்ளிக்கு தாமதமாக செல்வதால் பாடங்களை கவனிக்க தவறுவதாகவும் மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதனையடுத்து இன்று கிராமத்திற்கு வந்த அரசு பேருந்தை பள்ளி மாணவ, மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: அரசுத் தேர்வுகளில் உள்நுழையும் கறுப்பு ஆடுகள் விரைவில் களையப்படும் - ஜெயக்குமார்