காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மணிமாறன் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளியில் மணிமாறனிடம் அறிவியல் ஆசிரியை சுகந்தி ரெக்கார்டு நோட்டு கேட்டுள்ளார். அதனை மாணவர் கொண்டுவராததால், அவரை ஆசிரியர் வகுப்பறைக்கு வெளியே நிற்கவைத்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, ரெக்கார்டு நோட்டை எடுத்து வருவதற்காக வீட்டிற்குச் சென்ற மணிமாறன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையறிந்த அவரது உறவினர்கள், அப்பகுதி பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த ஒரகடம் காவல் துறையினர் மணிமாறனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவர்த்தை நடத்தினர்.
ஆனால், இதில் சமாதானம் அடையாத பொதுமக்கள் ஆசிரியை சுகந்தியை கைதுசெய்ய வேண்டும், அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: ஆசிரியர் தாக்கி மாணவன் கை எலும்பு முறிவு!