கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன.
கரோனா வைரஸ் தொற்று குறைந்த மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்தை தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கு தளர்வு இன்று (ஜூன் 21) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பேருந்து சேவை தொடங்கின.
கடந்த 41 நாள்களுக்கு பிறகு தொடங்கிய பேருந்து போக்குவரத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணித்து வருகின்றனர். 50 விழுக்காடு இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு பணிமனைகளில் உள்ள 160 பேருந்துகளில் 100 பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகிறன.
இதையும் படிங்க: ’நீட் வேண்டாம் என்பதே பெரும்பாலானோர் கருத்து’ - நீதிபதி ஏ.கே.ராஜன் தகவல்