செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி (37). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது பணியை முடித்துவிட்டு நேற்றிரவு (ஏப்ரல் 11) இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வடகல் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த நாற்பது அடி நீளமுள்ள லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. தலையில் பலத்த காயம் அடைந்த புகழேந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் சாலையின் ஓரமாக நிறுத்தப்படுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், எனவே சாலையில் வாகனத்தை நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: செல்ஃபி எடுக்கும்போது தடுமாறி கூவத்தில் விழுந்த இளைஞர்