ETV Bharat / state

தலைமறைவாக இருந்த வழிப்பறி கொள்ளையன் கைது!

author img

By

Published : Feb 23, 2021, 12:47 PM IST

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

mobile
mobile

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியாக செல்பவர்களை மிரட்டி அவர்களிடமிருந்து பணம், செல்போன்களை சிலர் பறித்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் தனிப்படை அமைத்து வழிப்பறியில் ஈடுபடுவர்களை தேடிவந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஏற்கனவே மீஞ்சூரை சேர்ந்த ராகுல் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக இருந்த கொள்ளையனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். பூந்தமல்லி அருகே கொள்ளையன் சுற்றி திரிவதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், அவனை மடக்கி பிடித்தனர். விசாரணையில், திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த சூர்யா என்பது தெரியவந்தது. மேலும் அவனிடமிருந்து 8 செல்போன்கள், ஒரு அரிவாள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கொள்ளையனை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.