காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் ஐநாக்ஸ், பிராக்ஸி ஏர், ஏர் வாட்டர் என்ற ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் இன்று (மே.9) ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை, திமுக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி ஒன்றிய செயலாளர்கள் படப்பை மனோகரன், ந.கோபால், எஸ்.டி.கருணாநிதி ஆகியோருடன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அந்நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் எங்கு சப்ளை செய்யப்படுகிறது. நிறுவனங்களின் கோரிக்கைகள் என்ன என்பது குறித்து, நிறுவனங்களின் பொறுப்பாளர்களிடம் தகவல்களை கேட்டறிந்து உடனடியாக சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரை தொடர்புக்கொண்டு ஆலோசனை மேற்கொண்டார்.
நிறுவன அலுவலர்களிடம், இங்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜன் முதலில் எங்கள் தொகுதிக்கும் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சைக்கு ரூ. 2 லட்சத்துக்கும் மேல் பரிவர்த்தனை செய்யலாம்!