ETV Bharat / state

ராமானுஜரின் 1005ஆவது அவதார பிரம்மோற்சவம்: களைகட்டிய ஸ்ரீபெரும்புதூர் தேரோட்டம்! - காஞ்சிபுரம் தேர்

வைணவ மகான் ராமானுஜரின் 1005ஆவது அவதார பிரம்மோற்சவத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் கோலாகலமாக நடைபெற்ற ராமானுஜரின் திருத்தேரோட்ட நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ராமானுஜரை தரிசித்துச் சென்றனர்.

ராமானுஜரின் 1005 வது அவதார பிரமோத்சவம்ராமானுஜரின் 1005 வது அவதார பிரமோத்சவம்ராமானுஜரின் 1005 வது அவதார பிரமோத்சவம்ராமானுஜரின் 1005 வது அவதார பிரமோத்சவம்ராமானுஜரின் 1005 வது அவதார பிரமோத்சவம்ராமானுஜரின் 1005 வது அவதார பிரமோத்சவம்ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
ராமானுஜரின் 1005 வது அவதார பிரமோத்சவம்ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
author img

By

Published : May 4, 2022, 5:53 PM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 3ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோவிலுக்கு பூதபுரி ஷேத்ரம் என்ற பெயரும் உண்டு. இந்த கோயில் 108 வைணவ திவ்யதேசங்களில் சிறப்புமிக்க ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்த கோயிலில்தான் வைணவத்தில் பிறந்து பல சீர்திருத்தங்களை மேற்கொண்ட வைணவ மகான் ராமானுஜர் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று 1017ஆம் ஆண்டு பிறந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீபெரும்புதூர் பகுதி மக்கள் ஆதிகேசவ பெருமாளை பெரியவர் என்றும்; ராமானுஜரை சிறியவர் என்றும் அழைப்பது வழக்கம்.
ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவின் போது சிறப்பம்சமாக ஸ்ரீஆதிகேசவ பெருமாளுக்கு 10 நாட்கள் உற்சவமும் ராமானுஜருக்கு அவதார பிரம்மோற்சவம் என்று 10 நாட்கள் உற்சவமும் நடைபெறுவது வழக்கம்.

களைகட்டிய ஸ்ரீபெரும்புதூர் தேரோட்டம்

திருத்தேரோட்டம் தொடக்கம்: இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி ஸ்ரீஆதிகேசவ பெருமாளுக்கு சிம்ம வாகனம், கருடசேவை, யானை வாகனம், குதிரை வாகனம் மற்றும் திருத்தேர் என 10 நாள் உற்சவம் 25ஆம் தேதியோடு நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து நடைபெறும் ராமானுஜரின் 1005ஆவது அவதார பிரம்மோற்சவம் 26ஆம் தேதி காலை முதல் தொடங்கியது. ராமானுஜர் அவதார பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவாக கருதப்படுவது 9ஆம் நாள் உற்சவமான ராமானுஜரின் திருத்தேர் உற்சவமாகும்.

திரண்ட பக்தர்கள்: அந்தவகையில் இன்று மிக கோலாகலமாக நடைபெற்ற ராமானுஜரின் திருத்தேர் உற்சவத்தைக்காண தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ராமானுஜரின் தரிசனம் பெற்றனர். ராமானுஜரின் திருத்தேரானது தேரடி வீதி திருவள்ளூர் சாலை, திருமங்கையாழ்வார் தெரு மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக சுமார் 2 கி.மீ., தூரம் வரை பவனி வந்தது.

அன்னதானம் விநியோகம்: வழியெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆன்மிக அன்பர்கள் மூலம் பக்தர்களுக்கு மோர், பானகம் மற்றும் அன்னதானங்களும் வழங்கப்பட்டன. இத்திருத்தேர் உற்சவத்தையொட்டி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இத்தைகைய சிறப்பு வாய்ந்த தேரோட்டத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் ராமானுஜரின் தரிசனத்தால் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க: மே 4 - இன்றைய ராசி பலன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.