காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் அமைந்துள்ள பிரணவ மலையில் காலசக்கர யாகம் நடைபெற்றது. இந்த யாகமானது நாடும் நாட்டு மக்களும் நலம் பெற, வானம் மும்மாரிப் பொழிய, வறண்ட பூமி செழிக்க, வறுமை ஒழிய, நல்ல தலைமை ஏற்பட, மனிதர்களின் ஆயுட் காலம் அதிகரிக்க, ஆரோக்கியத்துடன் வாழ நடைபெற்றது.
சுற்றிலும் 19 அக்னி குண்டங்கள் அமைக்கப்பட்டு 19 சித்தர்களால் இந்த யாகம் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் தங்களுக்கு உள்ள குறைகளைப் போக்க ஒவ்வொரு அக்னி குண்டத்திலும் அரிசி, பொறி, விறகு குச்சிகளை போட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏரளாமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.