காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று காலத்தில் வேலை வாய்ப்பு இழந்து பொருளாதாரத்தில் நலிவடைந்த தனிநபர்கள், தொழில் துவங்கிட நிதி வழங்கிடவும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வங்கிக் கடனுதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (ஆகஸ்ட் 29) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டு உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கரோனா சிறப்பு வாழ்வாதார கடனுதவி திட்டத்தின் கீழ் 40 குழுக்களுக்கு ஒரு கோடியே 77 லட்சம் மதிப்பிலான காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசராவ், முன்னாள் அமைச்சர் வி சோமசுந்தரம், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன் மற்றும் பயனாளிகள் என ஏராளமானோர் தகுந்த இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: குழாய் பதிக்கும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு - அதிரடிப்படை குவிப்பு !