ETV Bharat / state

குடும்பத் தகராறு காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட ராணுவ வீரர்

காஞ்சிபுரம்: ராணுவ வீரர் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாக தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

ராணுவ வீரர் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை

author img

By

Published : Mar 2, 2021, 2:58 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் திம்மையன் பேட்டை அருகே வன்னியர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (38). இவர் ஒடிசாவில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நதியா என்ற பெண்ணுடன் திருமணமாகி, ஜெகத்ரட்சகன், சோம்நாத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

செந்தில் குமார் விடுப்பில் கடந்த 15 நாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்தார். அந்த நாள் முதல் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக நான்கு நாட்களுக்கு முன் அவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

இதனால் மனமுடைந்த செந்தில் குமார், வீட்டில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: சேலத்தில் ஆட்டோ ஓட்டுநர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.