ETV Bharat / state

கல்குவாரியில் குதித்த இளைஞர் சடலமாக மீட்பு! - software engineer suicide in chennai

காஞ்சிபுரம்: சிக்கராயபுரம் கல்குவாரியில் குதித்த இளைஞரை தீயணைப்புத் துறை வீரர்கள் தீவிரமாகத் தேடிவந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

software engineer suicide in kundrathur
software engineer suicide in kundrathur
author img

By

Published : Dec 21, 2019, 9:29 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியின் அருகில் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் வந்தார். இதையடுத்து, அந்த இளைஞர் வாகனத்தை நிறுத்திவிட்டு திடீரென கல்குவாரியில் உள்ள நீரில் குதித்து மூழ்கினார். இதைக்கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மாங்காடு காவல் துறையினருக்கும், பூந்தமல்லி தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் இளைஞரைத் தீவிரமாகத் தேடினர். இரவு நேரமானதால் அந்த இளைஞரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, இன்று காலை மீண்டும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு இளைஞரை சடலமாக மீட்டு உடற்கூறாய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இளைஞர் சடலமாக மீட்பு

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தற்கொலை செய்துகொண்ட இளைஞர் பூந்தமல்லி அருகேயுள்ள சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் (29), என்பதும் நுங்கம்பாக்கத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் தற்கொலை செய்துகொண்டதற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:

வீட்டிற்கு அனுப்ப பணமில்லை... கஞ்சா விற்பனையை கையிலெடுத்த மூவர் கைது!

Intro:சிக்கராயபுரம் கல்குவாரியில் குதித்து சாப்ட்வேர் இன்ஜினீயர் தற்கொலை.

Body:மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் நேற்று மாலை ஒருவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு
கல் குவாரியில் குதித்து நீரில் மூழ்கினார். இதனை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து விட்டு மாங்காடு போலீசாருக்கும், பூந்தமல்லி தீயணைப்பு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கல் குவாரியில் குதித்த நபரை தீவிரமாக தேடினார். இரவு நேரமானதால் அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை இதையடுத்து இன்று மீண்டும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பனியில் ஈடுபட்டனர். நேற்று மாலை குவாரியில் குதித்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர்Conclusion:இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குவாரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது பூந்தமல்லி, சீனிவாசபுரம், லட்சுமிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன்(29), என்பதும் நுங்கம்பாக்கத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில தினங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த கலைச்செல்வன் கல்குவாரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகவும் இதற்கு வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.