40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்திவரதரை தரிசிக்க இன்னும் ஆறு நாட்களே உள்ளதால் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்துவருகின்றனர்.
இன்னும் ஆறு நாட்களே இருப்பதாலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் விடுமுறை என்பதாலும் வழக்கத்தைவிட பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் வரும் தினங்களில் இதைவிட அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுவருகிறது. இதுவரை 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளது குறிப்பிடத்தக்கது.