காஞ்சிபுரம்: சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு, அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் புகார் எழுந்தது.
இதையடுத்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அவர் மீது மூன்று புகார்கள் அளிக்கப்பட்டு, போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அதன்படி டேராடூன் விரைந்த சிபிசிஐடி தனிப்படை சிவசங்கர் பாபாவை கைதுசெய்தது.
பிணை மனுக்கள் தள்ளுபடி
அவருக்கு உடந்தையாக இருந்ததாக, ஆசிரியை சுஸ்மிதா காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.
இந்த நிலையில் சிவசங்கர் பாபா, ஆசிரியை சுஸ்மிதா ஆகியோர் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனு தாக்கல்செய்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அனைத்து வழக்கிலும் பிணை மனுக்களைத் தள்ளுபடிசெய்து இன்று (ஜூலை 19) உத்தரவிட்டது.
இதையும் படிங்க: கோமியத்தை விமர்சித்ததால் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் விடுதலை