காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காந்தி சாலைப் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் பட்டு சேலைக் கடை முன்பு பெண் ஒருவர் சாலையோரக் கடை வைத்துள்ளார்.
பட்டு சேலைக் கடை வாசல் அருகே கடை வைத்து இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி கடை உரிமையாளர்கள் அந்தப் பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றியதால், அப்பெண்ணை கடை உரிமையாளர்கள் தாக்கியுள்ளனர். இது தொடர்பான காணொலி காட்சி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
இச்சம்பவம் குறித்து இருதரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்த திமுக!