தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய வடக்கு மண்டல நூற்றாண்டு விழா மாநாட்டின் ஊர்வலம் காஞ்சிபுரத்தில் நடந்தது.
இதில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகராஜன் உட்பட பல்வேறு மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த விழா குறித்து சண்முகராஜன் கூறுகையில், “அரசு ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஒரு நபர் குழுவின் பரிந்துரை அறிக்கையை அரசு ஏற்க வேண்டும்.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு - முக்கிய குற்றவாளியை பிடிக்க மக்கள் உதவியை நாடிய சிபிசிஐடி