ETV Bharat / state

ரூ.1.52 கோடி மதிப்புள்ள பொருள்களை ஏற்றிச் சென்ற லாரி கடத்தல்: காவல்துறை விசாரணை! - காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு கோடிய 52 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐடிசி நிறுவனத்தின் சிகரெட் பண்டல்களை ஏற்றி வந்த லாரியை கடத்திச் சென்ற கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Hijacking of goods worth Rs 1.52 crore
ரூ. 1.52 கோடி மதிப்பிலான பொருள்கள் கடத்தல்
author img

By

Published : Aug 27, 2020, 7:16 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் கூட்ரோடு பகுதியில் ஐடிசி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கிருந்து, ஒரு கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட் மற்றும் பிஸ்கட் பண்டல்களை ஏற்றிய கண்டெய்னர் லாரி சென்னை-பெரம்பூர் நோக்கி சென்றது. அப்போது, காரில் வந்த அடையாள தெரியாத 6 நபர்கள் லாரியை மடக்கி அதிலிருந்த ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குமாரின் கண்களை கட்டி லாரியை அந்த கும்பல் ஓட்டிச் சென்றது.

பின்னர், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே லாரி ஓட்டுநர் குமாரை கீழே தள்ளிவிட்ட கும்பல் லாரியை பெங்களூரு செல்லும் சாலையில் பறந்தது. சாலையில் மயங்கி கிடந்த லாரி ஓட்டுநர், இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். பின்னர் திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை பகுதியில் ஐடிசி பொருள்களை டெலிவரி செய்யும் யுசிஜி டிரான்ஸ்போர்ட் மேலாளர் முளிதரனிடம் நடந்தவற்றைக் கூறினார்.

அதைத் தொடர்ந்து முரளிதரன் ஐடிசி நிறுவனத்தின் காண்ட்ராக்டருக்கு தகவல் அளித்துவிட்டு, ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து, லாரி ஓட்டுநர் குமாரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் கூறியதாவது, "திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை பகுதியில் ஐடிசி குடோன் உள்ளது. அங்கிருந்து பல இடங்களுக்கு லாரிகள் மூலம் சிகரெட் மற்றும் பிஸ்கட் போன்ற பொருள்களை சப்ளை செய்வார்கள். நான் 1.52 கோடி ரூபாய் மதிப்புள்ள சிகரெட் மற்றும் பிஸ்கட் போன்ற பொருள்களை ஏற்றிக்கொண்டு உளுந்தையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வட்டம் காட்டு கூட்டு ரோடு வழியாக மண்ணூர் சென்று கொண்டிருந்தேன்.

அப்போது, திடீரென காரில் வந்தவர்கள் தடுத்து நிறுத்தி என்னை தாக்கி கண்களில் கருப்பு துணி கட்டி லாரியை கடத்தினர். காஞ்சிபுரம் அருகே என்னை கீழே தள்ளி விட்டு மறைந்து விட்டனர். நான் மயக்கமான நிலையில் இருந்தேன். பின்னர் காவல் துறைக்கும், என்னுடைய ட்ரான்ஸ்போர்ட் மேலாளரிடமும் நடந்தவற்றை கூறினேன்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.