காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பகுதியில் உபயோகப்படுத்தப்படுவதற்கும், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவிடும் வகையிலும் பான்பிக்லீஓளி என்ற தனியார் நிறுவனம் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை (Oxygen Plant) நிறுவியது.
இந்நிலையில், நேற்று (ஜூன் 11) தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலையில் ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இந்த ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை திறந்து வைத்து ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கிவைத்தார்.
பின்னர் பான்பிக்லீஓளி நிறுவனம், அமைச்சர்கள் முன்னிலையில் இந்த ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் இயந்திரமானது காற்றிலிருந்து கரோனா நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ ஆக்சிஜனை ஒரு நிமிடத்திற்கு 266 லிட்டர் வரையில் உற்பத்தி செய்து தரும் திறன் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.