ETV Bharat / state

ரவுடி பினுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் - judicial custody

காஞ்சிபுரம்: சூளைமேட்டைச் சேர்ந்த பிரபல ரவுடி பினுவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

binu
author img

By

Published : Jun 19, 2019, 9:25 PM IST

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பிரபல ரவுடி பினு மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே உள்ள மலைப்பகுதியில் தனது பிறந்தநாளை கொண்டாடியபோது, காவல் துறையினர் 70க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்தனர்.

அப்போது பினு மட்டும் தப்பியோடினார். மேலும் அச்சமயத்தில் பினு கத்தியால் கேக் வெட்டிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் என்கவுண்டருக்கு பயந்த பினு, காவல்துறையினரிடம் சரணடைந்தார். அதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, 30 நாட்கள் மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டது.

ரவுடி பினுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

ஆனால், காவல் நிலையத்திற்கு வராமல் அவர் தலைமறைவாகியுள்ளார். இதைத் தொடர்ந்து நான்கு தனிப்படை அமைத்து அவரைத் தேடிவந்த காவல் துறையினர், நேற்று சென்னை கொளத்தூரில் வைத்து அவரை கைது செய்தனர். இந்நிலையில், இன்று பினுவை ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, பினுவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

Intro:Body:பிரபல ரவுடி பினு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு காவல் நிலைய எல்லையில் பிரபல ரவுடி பினு பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்து உள்ளான் இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட ரவுடி பீனு வழிப்பறீ வழக்கில் ஆஜராகாத காரணத்தால் மாங்காடு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரவுடி பீனுவிற்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார் மாங்காடு போலீசார் பீனுவை புழல் சிறையில் அடைத்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.