காஞ்சிபுரம்: தமிழ்நாடு முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மணல் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்து, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்றச் சங்கம் எனும் பெயரில் புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த சங்கத்தின் பொதுக்குழு, நிர்வாகிகள் நியமனக் கூட்டம், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று (ஆக.10) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவராக, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தீனன் தேர்வு செய்யப்பட்டார்.
பொதுப்பணித்துறை மூலம் மணல் வழங்கல்
பின்னர் புதிய நிர்வாகிகளுடன் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், தமிழ்நாட்டில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை போக்கி தரமான மணல் குறைவான விலைக்கு கிடைக்க , ஆன்லைன் பதிவு முறையை நடைமுறைப்படுத்துவதற்கு தடைவிதிக்க வலியுறுத்தப்பட்டது.
மேலும் மீண்டும் பொதுப்பணித்துறை மூலமாக, தமிழ்நாட்டின் ஆற்றுப்படுகைகளில் மணல்குவாரிகளை திறந்து மணல் வழங்க நடவடிக்கை எடுக்கவும், அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: தேசிய கைத்தறி தினம்- இந்திய துணி வகை காணொலி கண்காட்சி நாளை நிறைவு!