கடந்த 20 நாட்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட மாமல்லபுரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோரின் சுற்றுப்பயணத்துக்குப்பின், இன்று மீண்டும் இயல்பு நிலைக்கு மாறியுள்ளது.
மேலும், இருவரும் சந்தித்த பின் மாமல்லபுரத்திற்கு ஒரு புதிய கலைத் தோற்றம் வந்ததாகவும் அதைக் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் காலைப்பொழுதில் இருந்தே குவிந்தவண்ணம் இருப்பதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.
குறிப்பாக வெண்ணெய் உருண்டைக் கல், அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரைக் கோயில் ஆகிய பகுதிகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தற்போது இருக்கும் மாமல்லபுரத்தை பார்ப்பதற்கு மிகவும் பசுமையாகவும், அழகாகவும், சுத்தமாகவும் காணப்படுவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:
600 ஏக்கர் நில அபகரிப்பு விவகாரம் - காசாகிராண்டே முறையீடு தள்ளுபடி!