காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் உள்பட்ட வெங்காடு பகுதியில் சுமார் 2500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள நியாய விலை கடையின் மூலம் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. இந்நிலையில் இந்த நியாய விலை கடை கட்டடம் பழுதடைந்துள்ளதால் தற்காலிகமாக நியாய விலை கடை வெங்காடு பள்ளி வளாகத்தில் உள்ள நூலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் நூலகத்தில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் கிழிந்து வீணாகிவிட்டது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டால் பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் படிக்க முடியுமா? அல்லது இந்த நூலகத்தில் நியாய விலை கடை செயல்படுமா? என்று பொது மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இங்குள்ள மக்கள் அரசு அலுவலர்களிடமும், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனியிடமும் பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
ஆகவே அரசு கவனம் செலுத்தி வெங்காட்டில் உள்ள நியாயவிலை கடையை புதுப்பித்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.