ETV Bharat / state

'பாரம்பரிய விளையாட்டுகளையும் ஊக்குவிப்போம்' - விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ - Sports Minister Kiran Rijiju

காஞ்சிபுரம்: ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை போலவே பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளையும் மத்திய அரசு ஊக்குவித்துவருகிறது என மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

-kiran-rijiju
-kiran-rijiju
author img

By

Published : Feb 21, 2020, 10:51 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் நலன் மேம்பாட்டு நிறுவனத்தில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அதன்பின் அந்நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்ட மாணவர் விடுதி, வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாடு விளையாட்டு துறைகளில் ஏராளமான திறமைமிக்கவர்கள் உள்ளனர். இந்திய அளவிலான விளையாட்டுப் பேட்டிகளில் பதக்கங்கள் பெறுவதற்கு தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்தியா சிறந்த முறையில் தயாராகிவருகிறது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைப் போலவே பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளையும் மத்திய அரசு ஊக்குவித்துவருகிறது.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ

அதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர், அலுவலர்களுடன் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு விளையாட்டுத்துறைக்கு அதிகபட்ச உதவிகளைச் செய்துவருகிறது. உயர் தரமான பயிற்சி மையங்கள் கொடைக்கானல், ஊட்டி போன்ற முக்கிய இடங்களில் செயல்பட்டுவருகிறது" எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் "தமிழ்நாடு, கலாசாரத்திற்கும் பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் பெயர் பெற்றது. மத்திய அரசு அதனை வளர்க்க பாடுபடும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 65 அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் சங்கமித்த விளையாட்டுப் போட்டிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.