காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட பேருந்து நிலையத்தில் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பேசுகையில்,"தனியார் பள்ளிகள் கூடுதல் ஆவதும், அரசுப் பள்ளிகள் குறைகிறது என்பது தவறான கருத்து என்றும், இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் 2 லட்சம் பேர் சேர்க்கைக்கு வந்திருப்பதாகவும் வரும் ஆண்டில் அது 3 லட்சமாகும் என்றார். எனவே பள்ளிகள் எண்ணிக்கை முக்கியமல்ல மாணவர் சேர்க்கை தான் முக்கியம் என்ற அவர், அரசு பள்ளியின் வளர்ச்சி கண்டு தனியார் பள்ளிகள் அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் புதுப்பிக்கப்பட்டு இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவு மழை நீர் வடிகாலுக்கென தனியாக வழி அமைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் அதனைத்திறந்து வைப்பார் என்றும் தெரிவித்தார்.
மேலும் நடைபெறவிருக்கின்ற 12, 11, 10 ஆம் வகுப்பு தேர்தலுக்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், வினாத்தாள்கள் அனைத்தும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விழிப்புணர்வு ஏற்படுத்தும் மீம்ஸ் காணொலிகள்: சமூக வலைதளத்தில் வெளியிட்ட காவல் துறை!