ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் 12ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்

காஞ்சிபுரத்தில் வருகின்ற 12ஆம் தேதி நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தகுதியுடையவர்கள் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
author img

By

Published : Feb 10, 2021, 10:35 PM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற 12ஆம் தேதியன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதால் இம்முகாமில் தகுதியுடையவர்கள் பங்கேற்று பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வருகின்ற 12ஆம் தேதியன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆள்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பட்டம், பட்டயம் , ஐடிஐ, தையல் பயிற்சி முடித்தவர்கள் உரிய சான்றிதழ்களுடன் காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் பங்கேற்று பயன் பெறலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை மெட்ரோ ரயில் பணிகள்: அமைச்சர் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.