காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமி(62). கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு செய்யாறு பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று முதியோர் உதவித்தொகை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருவதற்காக குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது குன்றத்தூரில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் தனியார் பேருந்து, எதிர்பாராதவிதமாக லட்சுமி மீது மோதியதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதை பார்க்காத ஒட்டுநர் பேருந்தை இயக்கியதால் முன்பக்க சக்கரம் மூதாட்டி மீது ஏறி,இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பேருந்து ஒட்டுநரை கைது செய்து வழக்குப் பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.