காஞ்சிபுரம்: மாவட்ட காவல்துறை சார்பில் 222 காவலர்களுக்கு நேற்று (அக்.19) நடந்த 'காவலர் பயிற்சி நிறைவு விழா'வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, காவலர் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், 'பாரம்பரியமிக்க, பெருமைமிக்கதுக்குரிய தமிழ்நாடு காவல்துறையில் இளம் காவலர்கள் இணைந்து இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும். நியாமான சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டு பொதுமக்களுக்கு எல்லா விதத்திலும் உதவக்கூடிய காவலர்களாக தங்களது பணி காலம் முழுவதுமாக திகழ வேண்டும் என்றார். அதனை மனதில் வைத்துக்கொண்டு, பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். நியாமான சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டு பொதுமக்களுக்கு எல்லா விதத்திலும் உதவக்கூடிய காவலர்களாக, தங்களது பணிக்காலம் முழுவதுமாக திகழவேண்டும் என்றார்.
தமிழ்நாடு காவல்துறை பணிக்கு தேர்வான 222 காவலர்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் நடத்திய காவல்துறை பயிற்சி பள்ளியில் கடந்த ஏழு மாதங்களாக காவலர் பயிற்சி மட்டுமின்றி நீச்சல் பயிற்சி, ஓட்டுனர் பயிற்சி, முதலுதவி பயிற்சி, தீயணைப்பு பயிற்சி, கமாண்டோ பயிற்சி மற்றும் இதர பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, காவலர் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையும், சிலம்பாட்டம், கராத்தே பயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்டவைகளும் நடைபெற்றன.
இவ்விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர், காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் டிஎஸ்பி சண்முகம் மற்றும் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளும், பயிற்சி பெற்ற காவல் துறையினரின் பெற்றோர்களும், உறவினர்களும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: தீபாவளியையொட்டி கும்பகோணத்தில் காவல் உதவி மையம் திறப்பு