ETV Bharat / state

ஊராட்சி மன்றத் தலைவரின் இருசக்கர வாகனம் திருட்டு -  சிசிடிவி காட்சியைக் கொண்டு போலீசார் விசாரணை!

காஞ்சிபுரம்: புதுப்பாக்கம் அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் இரு சக்கர வாகனத்தை திருடியவர்கள் குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

kanjipuram
author img

By

Published : Nov 20, 2019, 10:15 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பாக்கம் காமாட்சி அம்மன் தெருவில் வசித்துவருபவர் ஜெயபால். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர், கடந்த புதன்கிழமை வழக்கம் போல் தனது வீட்டினருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். மறுநாள் காலை இருசக்கர வாகனத்தை காணவில்லை, அதிர்ச்சியடைந்த ஜெயபால் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர், வீட்டிலுள்ள சிசிடிவி காட்சியை பார்த்தபோது சம்பவத்தன்று இரு நபர்கள் ஜெயபால் வீட்டை நோட்டமிட்ட காட்சியும், இரு சக்கர வாகனத்தை திருடி சென்ற காட்சியும் பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சியின் அடிப்படையில், காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள்

இதையும் படிங்க: உணவில் மயக்கமருந்து கலந்து பணம் நகைகள் கொள்ளை! - சமையல்காரர் கைது!

Intro:காஞ்சிபுரம்
20-11-2019

*காஞ்சிபுரம் பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் புல்லட் இரு சக்கர வாகனம் திருட்டு.*

*மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சியைக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.*

Body:காஞ்சிபுரம் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயபால். இவர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் தெருவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தனது வீட்டு அருகே கடந்த புதன்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராயல் என்பீல்டு புல்லட் இருசக்கர வாகனம் மாயமாகி இருந்தது.

இதுகுறித்து சிவகாஞ்சி போலீசில் ஜெயபால் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது வீட்டில் உள்ள சிசிடிவி காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

Conclusion:இரவு நேரத்தில் மர்ம நபர்கள் இருவர் வீட்டை நோட்டமிட்ட காட்சியும், அவர்கள் இரு சக்கர வாகனத்தை திருடி சென்றதும் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் சிசிடிவி காட்சியை கைப்பற்றி போலீசார் தற்போது இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.