ETV Bharat / state

21 குண்டுகள் முழுங்க மோப்ப நாய் அஜய் உடல் நல்லடக்கம்! - kancheepuram

காஞ்சிபுரத்தில் பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளைப் பிடிக்க காவல் துறையினருக்கு பெரும் உதவி செய்த அஜய் என்ற மோப்ப நாய் உயிரிழந்ததையடுத்து 21 குண்டுகள் முழங்க அதன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

d
d
author img

By

Published : Aug 6, 2021, 3:38 PM IST

காஞ்சிபுரம்: காவல்துறை மோப்பநாய் படைப்பிரிவில் அஜய் என்ற மோப்பநாய் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றியது.

'ஜெர்மன் ஷெப்பர்ட்' ரகத்தைச் சேர்ந்த இந்த மோப்ப நாய் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த கொலை, கொள்ளை உள்பட 245 குற்ற வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றி பல துப்புகளைக் கொடுத்துள்ளது. மேலும் 12 வழக்குகளில் துப்பு கொடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க உதவி செய்துள்ளது.

அரசு மரியாதையுடன் அஜய் உடல் நல்லடக்கம்

இந்நிலையில் மோப்ப நாய் அஜய் கடந்த சில நாள்களுக்கு முன் வயது மூப்பு, உடலில் குடல் புழு அதிகரித்தது ஆகிய காரணங்களால் நோய்வாய்ப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தது. தொடர்ந்து ஜூலை 31ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி அஜய் உயிரிழந்தது.

21 குண்டுகள் முழுங்க மோப்ப நாய் அஜய்யின் உடல் நல்லடக்கம்

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை சார்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் தலைமையில், காவல் துறையினர் மலர் மாலை வைத்து அஜய்யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மோப்ப நாய் அஜய்யின் உடல் பராமரிக்கும் இடத்திலேயே இன்று(ஆக. 6) நல்லடக்கம் செய்யப்பட்டது.

பதக்கங்களை குவித்த அஜய்

செல்ல பிராணியாக வளர்ந்த அஜய் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்கள், பரிசுகளை பெற்றுள்ளது. 2015ஆம் ஆண்டு சென்னையில் நடந்த மாநில துப்பறியும் நாய்களுக்கான பணித் திறன் போட்டியில் 4ஆவது இடம்பிடித்தது.

காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறையினரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்த மோப்ப நாய் அஜய் உயிரிழந்துள்ளது காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இந்தியன் 2 வழக்கு: தனி நீதிபதி உத்தரவின் நகல் இல்லாமல் விசாரணைக்குப் பட்டியலிட அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.