ETV Bharat / state

பிரபல ரவுடி படப்பை குணாவின் மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை - தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை - பிரபல ரவுடி படப்பை குணாவின் மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிரபல ரவுடியாக வலம் வரும் படப்பை குணாவின் மனைவியான எல்லம்மாளை வழக்கு விசாரணைக்காக தனிப்படை போலீசார் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று, அவரிடம் அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Police are conducting a serious investigation into the wife of famous rowdy Padappai Guna

author img

By

Published : Jan 9, 2022, 6:05 PM IST

Updated : Jan 9, 2022, 6:52 PM IST

காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் தொழில் நகரமாகவும், தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாகவும் விளங்குகின்ற காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளின் அட்டகாசம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

அதிலும், குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதிகளில் நாளுக்கு நாள் ரவுடிகளின் அட்டகாசம் பெருகி வருகிறது.

அப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ரவுடிகள் மாதம்தோறும் தங்களுக்கு, அதிகப்படியான மாமூல்களைக் கொடுக்க வேண்டும் என தங்கள் ஆதரவாளர்கள் மூலம் மிரட்டிப் பல தொழில் நிறுவனங்களை வேலை செய்யவிடாமல் தடுத்து வருவதாகவும் தொடர் புகார்கள் எழுந்தன.

அதையடுத்து சென்னைப் புறநகர் மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்குச் சிறப்பு அலுவலராக என்கவுன்ட்டர் ஸ்பெசலிஸ்ட்டும் கூடுதல் காவல் கண்காணிப்பாளருமான வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் தனிப்படை

இதனைத்தொடர்ந்து அவரது தலைமையில் காவல் துறையினர் ரவுடிகளை ஒதுக்குவதற்குச் சிறப்புத் தனிப்படைகளை அமைத்து, தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.

அந்த வகையில் சுங்குவார்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியப் பகுதிகளில் ரவுடிசம் மற்றும் கட்டப்பஞ்சாயத்து வேலையில் ஈடுபடும் பிரபல ரவுடியாக இருந்து வரும் காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலம் பகுதியைச்சேர்ந்த படப்பை குணா (42) என்பவரைக் கைது செய்வதற்கு காவல் துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகியப் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி எனக் கொடிகட்டிப் பறக்கும் பிரபல ரவுடி ஆவார்.

இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் என 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் பிரபல ரவுடி படப்பை குணாவின் ஆதரவாளர்களை ஒடுக்குவதிலும் அவர்களைக் கைது செய்வதிலும் சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றனர்.

முன்ஜாமீனில் வந்த குணா தலைமறைவு

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த படப்பை குணா திடீரென தலைமறைவானார்.

அதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் அம்முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதனை அடுத்து அவருடைய ஆதரவாளர்களைக் கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

பிரபல ரவுடி படப்பை குணாவிற்கு வலது கரமாகச் செயல்பட்டு வந்த போந்தூர் சிவா மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் எஸ்.பி.கே.தென்னரசு, திருநாவுக்கரசு ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் போந்தூர் சேட்டு என்பவரைக் காவல் துறை வலைவீசித் தேடி வருகின்றனர்.

குணாவின் மனைவியிடம் விசாரணை

பிரபல ரவுடி படப்பை குணாவின்  மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை

இந்நிலையில் இன்று காலை ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மதுரமங்கலம் இல்லத்திலிருந்த பிரபல ரவுடியான படப்பை குணாவின் மனைவி எல்லம்மாளை தனிப்படை காவல்துறையினர் வழக்கு விசாரணைக்காக சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல ரவுடி படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் மீது காவல் நிலையங்களில் சில வழக்குகளும் உள்ளன.

பிரபல ரவுடியான படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய நகராட்சி உறுப்பினர் பதவிக்குச் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய சேர்மன் பதவியைக் கைப்பற்றுவதற்காக முயற்சி எடுத்து, அதில் தோல்வி அடைந்தார்.

பாஜகவில் இணைந்த ரவுடி குணாவின் மனைவி

தற்போது அவரின் மனைவி பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டதாகவும், அவருடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பெரியார் சிலை அவமதிப்பு - கோவையில் பரபரப்பு

Last Updated : Jan 9, 2022, 6:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.