காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட அருங்குன்றம் கிராமத்தில் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இதற்கு அருகே அரசு அனுமதி பெற்ற தனியார் கல்குவாரி, கல் அரவை தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இங்கிருந்து வெளிவரும் புகை, புழுதியால் அப்பகுதி மக்கள் சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கல் அரவை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கருங்கல் துகள்கள் ஏரியில் படிகின்றன.
இங்கு தொடர்ந்து கனரக லாரிகள் வந்து செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் இன்று (டிச.1) பொதுமக்கள் அவ்வழியாக வந்த லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நியாய விலைக்கடையை சொசைட்டியாக மாற்றியதை எதிர்த்து பழங்குடியினர் போராட்டம்!