செங்கல்பட்டு மாவட்டத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், மாமல்லபுரத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது. பருவமழை தற்போது முடிந்த நிலையில், சரணாலயத்திலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர் நிரம்பி காணப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் பறவைகள் வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வந்துள்ளன.
தற்போது பொங்கல் விடுமுறை என்பதால் பொதுமக்கள் இந்தப் பறவைகளைக் காண சரணாலயத்தை நோக்கிப் படையெடுத்துள்ளனர். சரணாலயத்திற்குள் செல்ல சிறுவர்களுக்கு 10 ரூபாயும் பெரியவர்களுக்கு 30 ரூபாயும் நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும், பறவைகளை கண்குளிர காண்பதற்கு அதிகமான தொலைநோக்கு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பறவைகளையும், சரணாலயத்தின் இயற்கை அழகையும் ரசிப்பதால் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அளிப்பதால் பொதுமக்கள் குவிந்த வண்ணமே உள்ளனர்.
இதையும் படிங்க: விழுப்புரம், குழியில் விழுந்த குழந்தையை மீட்ட துணிச்சல் இளைஞர்கள்!