ETV Bharat / state

பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு ... ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்... - பரந்தூர்

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தில் இரு மாதங்களாக போராட்டம நடைபெற்று வருகிறது. நேற்று இரவு ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.

பரந்தூர் புதிய விமான நிலையம்... கிராம மக்களின் 63வது நாள் இரவு நேர கவன ஈர்ப்பு போராட்டம்

author img

By

Published : Sep 28, 2022, 7:20 AM IST

காஞ்சிபுரம்: சென்னையின் புதிய இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. குறிப்பாக பரந்தூர், ஏகனாபுரம், நாகபட்டு, நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம பகுதிகளில் இந்த புதிய விமான நிலையம் அமைப்பதற்கு நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது.

இதில் ஏகனாபுரம் கிராமத்தை சுற்றி மையமாக வைத்து நிலம் எடுப்பதாக தகவல் பரவியுள்ளது. இதனால் ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புதிய விமானம் நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, தினந்தோறும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் அமைதியான முறையில் இரவு நேர கவன ஈர்ப்பு போராட்டத்தில் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக ஈடுபட்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

பரந்தூர் புதிய விமான நிலையம்... கிராம மக்களின் 63வது நாள் இரவு நேர கவன ஈர்ப்பு போராட்டம்

இந்நிலையில் 63வது நாளான நேற்று ஏகனாபுரம் கிராமத்தில் இரவு நேரத்தில் தங்களது கைக்குழந்தைகள்,குடும்பத்தாருடன் பெண்கள், முதியவர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி இரவு நேர கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு கொடிகளையும், பதாகைகளையும் தங்களது கைகளில் ஏந்திக்கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பி அக்கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட முதியவர்கள், பெண்கள் தங்களது ஊரினை விட்டு நாங்கள் வெளியேற மாட்டோம் என்றும், எங்களுக்கு விமான நிலையாம் வேண்டாம் என கூறி கண்ணீர் மல்க தங்களது தலைகளில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: பிஎப்ஐ அமைப்பிற்கு 5 ஆண்டுகள் தடை - மத்திய அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.