செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், அதனைச் சுற்றியுள்ள 12-க்கும் மேற்பட்ட பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதாகக் கூறி, இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், வில்வராயநல்லூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அறிவித்த இடத்தில், அரசு அறிவித்தபடி நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் ஆர்வத்துடன் நெல்லை கொண்டுவந்து வைத்துள்ளனர்.
கடன் வாங்கியும், நகைகளை அடகுவைத்தும் விவசாயம்செய்யும் நிலையில்தான் விவசாயிகளின் நிலை உள்ளதெனக் கூறும் அவர்கள், உடனடியாக அரசு அறிவித்ததுபோல் இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, தங்களின் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர். இனியும் அரசு தாமதித்தால், தற்கொலைதான் செய்து கொள்ளவேண்டுமென ஆதங்கப்பட்டனர்.
இதையும் படிங்க: உடல்பருமன் அதிகரிக்கிறதா? - வீட்டிலிருந்தே செய்யக்கூடிய எளிமையான உடற்பயிற்சிகள்!