காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள அனுப்புரம் நகரத்தில் மத்திய அரசு ஊழியர்களால் மருத்துவப் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் சிறப்புகள் ஏராளமாக உள்ளன. அவற்றை விரிவாக விவரிப்பது இத் தொகுப்பாகும். கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள் தங்கும் விடுதி ஒன்றுஅனுப்புரத்தில் அமைந்துள்ளது. இவ்விடுதியில் வசிப்பதற்கு ஏதுவாக வசதிகளும் உள்ளன. அதில் சிறப்புமிக்க ஒரு இடமான மருத்துவப் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவின் சிறப்பு என்னவென்றால் இங்கு நூற்றுக்கணக்கான மருத்துவ மூலிகை பொருட்கள் நிறைந்த செடிகளும் கொடிகளும் தாவரங்களும் வளர்க்கப்படுகின்றன.
இதில் வளர்க்கப்படும் அனைத்து தாவரங்களும் எந்தவித ஆள் கொல்லி மருந்துகளையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் உபயோகிப்பதே இல்லை. முழுக்க முழுக்க இயற்கையான உரங்களை பயன்படுத்தி மட்டுமே வளர்க்கப்படுகிறது. அவ்வகையான இயற்கை உரங்களை அவர்களே தயாரித்து செடிகளுக்கு செலுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது. இதில் கிடைக்கும் மூலிகைப் பொருட்கள் அனைத்தையும் அப்பகுதியில் வசிக்கும் ஊழியர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
பூனை மீசை செடி, கல்யாண முருங்கை மரம், துளசி, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லி, கற்றாழை, இன்சுலின், வசம்பு, முடக்கத்தான், தூதுவளை, வல்லாரை போன்ற பலவகையான கீரை வகைகளும் மருத்துவச் செடிகள் வளர்க்கப்படுகின்றன.
செடிகள் அமைந்துள்ள பூங்காவில் மூன்று இடங்களில் எண் எட்டு அமைப்பு போடப்பட்டு அதில் கிழக்கில் இருந்து தெற்காக கடிகார முள் சுற்றுவதை போல் சுற்றிவர வேண்டும் அப்படி சுற்றி வந்தால் மூலிகைக் காற்று நம் உடம்பில் பட்டு நல்ல புத்துணர்ச்சியும் சுவாசமும் கிடைப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இங்கு இயற்கை உரம் ஆனது சுற்றுப்புறங்களில் கிடைக்கும் காய்கறி மற்றும் தேவையற்ற பழங்களை வாகனம் மூலம் சேகரிக்கப்பட்டு ஒரு இடத்தில் சேர்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மண்புழு வளர்ப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு, அதில் மண் புழுக்கள் வளர்க்கப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இவையே செடிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
இன்னும் பல புதிய மூலிகைச் செடிகளும் சேர்க்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.இத்தகைய பூங்காவை மக்களுக்கு மிகவும் அவசியமானது என்றும் இதை பார்த்து இன்னும் பல மக்கள் முன்வந்து இதனை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.